கலீஃபாவிடம் பைஅத் செய்ய வேண்டுமா?
எவன் ஒருவன் கிலாஃபத் உடைய பைஅத் இல்லாமல் மரணிக்கின்றானோ அவன் அறியாமைக் கால மரணத்தைத் தழுவுவான் என்று ஹதீஸ் உள்ளதா? இதன் விளக்கம் என்ன? ஈஸா நபி வரும் போது எந்த முறையிலான கிலாபத் இருக்கும்?
ரஸீன் ஸலாஹுத்தீன்
நீங்கள் சொன்னது போல் ஹதீஸ் உள்ளது உண்மை தான். ஆனால் இதை சில அறிவீனர்கள் தங்களின் தலைமைத்துவத்துக்கு மார்க்க முத்திரை குத்துவதற்காகப் பயன்படுத்துகின்றனர்.
கிலாபத்துடைய பைஅத் கலீபாவிடம் தான் செய்ய முடியும். அதாவது நாம் வாழும் காலத்தில் நாம் வாழும் பகுதியில் ஒரு கலீஃபா அதாவது இஸ்லாமிய அடிப்படையில் ஆட்சி செய்யும் நல்லாட்சியாளர் - இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது அவரைத் தலைவராக ஏற்காமல் ஒருவன் மரணித்தால் அவனது மரணம் அறியாமைக் கால மரணம் ஆகும்.
ஆனால் நாம் வாழும் இந்தக் காலத்தில் உலகின் எந்தப் பகுதியிலும் கிலாஃபத் முறையில் ஆட்சி ஏதும் இல்லை. அதனால் கலீஃபாவும் இல்லை. கலீஃபாவே இல்லை எனும் போது கலீஃபாவிடம் பைஅத் செய்யும் பேச்சுக்கு இடமில்லை.
இஸ்லாத்தில் இடப்படும் எந்தக் கட்டளையாக இருந்தாலும் அதற்கான வாய்ப்பு இருக்கும் போது நிறைவேற்ற வேண்டும் என்பது தான் அதன் பொருள். திருடினால் கையை வெட்ட வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பு இறைவனால் நமக்கு வழங்கப்படாத போது அது குறித்து அல்லாஹ் கேல்வி கேட்க மாட்டான். அது போல் தான் கலீஃபா ஒருவர் இருக்கும் போது அவரிடம் பைஅத் செய்யாவிட்டால் தான் இந்த ஹதீஸின் கட்டளையை நாம் மீறும் நிலை ஏற்படும்.
ஆனால் சில அறிவீனர்கள் நூறு இரு நூறு பேரைச் சேர்த்துக் கொண்டு தம்மை கிலாஃபத் அமைக்க வந்தவர் என்று ஏமாற்றி ஒரு அடிமைக் கூட்டத்தை உருவாக்க இந்த ஹதீஸைப் பயன்படுத்துகின்றனர். நீங்கள் எந்த நாட்டை ஆளும் கலீஃபா என்று கேட்கக் கூட உணர்வற்றவர்கள் தான் இதில் ஏமாறுவார்கள்.
இது குறித்து மேலும் அறிய
14.06.2011. 8:58 AM
கலீஃபாவிடம் பைஅத் செய்ய வேண்டுமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode