சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா?
பதில்:
மூன்று நேரங்களில் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து உள்ளார்கள்.
صحيح مسلم
1966 – وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ مُوسَى بْنِ عُلَىٍّ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِىَّ يَقُولُ ثَلاَثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَنْهَانَا أَنْ نُصَلِّىَ فِيهِنَّ أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ.
மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துவந்தார்கள்.
- சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை,
- நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கு) சாயும் வரை.
- சூரியன் மறையத் துவங்க்கியதிலிருந்து நன்கு மறையும் வரை.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி)
நூல் : முஸ்லிம் 1371
இந்த நேரங்களில் எந்தத் தொழுகையும் தொழக்கூடாது. எனினும் இந்த நேரங்களில் துஆ செய்வதற்குத் தடை ஏதும் இல்லை.
தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட இந்த நேரங்கள் சொற்ப நேரத்தில் முடிந்துவிடும். தொழ விரும்புபவர் இந்த நேரங்களைக் கடந்த பிறகு தொழுது கொள்ள வேண்டும்.
சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode