Sidebar

16
Tue, Apr
4 New Articles

சூப்பர் முஸ்லிம் குழுவுக்கு விவாத அறைகூவல்

விவாதங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Meera Catamaran Pavana

சூப்பர் முஸ்லிம் குழுவுக்கு விவாத அறைகூவல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...

சூப்பர் முஸ்லிம் என்கின்ற யூடியூப் சேனல் மூலம் இஸ்லாத்தையும், நவீன நடைமுறையும் இணைத்து சொல்வதாக கூறிக்கொண்டு இஸ்லாத்திற்கு விரோதமான ஷிர்க்குகளையும் மத்ஹபுகளையும் ஹதீஸ்களுக்கு மனம் போன போக்கில் விளக்கங்களையும், கதைகளையும் கூறிவரும் முஸ்தபா குறித்து மக்கள் நம்முடைய கவனத்திற்கு கொண்டு வந்த காரணத்தினால் சத்தியத்தை நிலைநாட்ட அவருக்கு  விவாத அழைப்பு கொடுக்கப்பட்டது.

20-5-2020 அன்று அனுப்பிய விவாத அழைப்பு

முதல் விவாத அழைப்பு 20.05.2020 விவரங்கள் பின்வருமாறு:

#சூப்பர்முஸ்லீம்முஸ்தாஃபாஅவர்களுக்கு_NTFன்விவாத_அழைப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....,

அன்பிற்குறிய சகோதரர் சூப்பர் முஸ்லிம் யுடூப் சானல் முஸ்தபா அவர்களுக்கு.... 

நீங்கள் பதிவிடும் வீடியோக்களை நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்.

சரியான ஹதீஸ் என்ற பெயரில் ஆதாரமாக எடுக்கத்தகாத ஹதீஸ்களை ஆதாரமாக அதிக அளவில் குறிப்பிட்டு வருகிறீர்கள்.

சில நூல்களில் ஹதீஸில் உள்ளதாக கூறும் போது அதில் இல்லாத கற்பனைகளையும் ஹதீஸ் போல் கூறி நபியின் பெயரால் பொய்களை இட்டுக் கட்டுகிறீர்கள்.

இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் தவறான #கொள்கையையும், #ஷிர்க்கையும், #மத்ஹபையும் நியாயப்படுத்த குர்ஆன் ஹதீஸை மனம் போன போக்கில் வளைத்து வருகிறீர்கள்.

இதை நாங்கள் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நிரூபிக்கத் தயாராக உள்ளோம்.

எனவே சுமுக்மான முறையிலும் கண்ணியமான முறையிலும் மேற்கண்டவை குறித்து உங்களுடன் விவாதித்து உண்மையை அடையாளம் காட்ட உங்களுக்கு விவாத அழைப்பு விடுக்கிறோம்.

இதற்கான உங்கள் ஒப்புதலை எதிர்பார்க்கிறோம் . உங்கள் ஒப்புதல் கிடைத்த பின்னர் ஊரடங்கு முடிந்து நாம் விவாத ஒப்பந்தம் செய்வோம். விவாதம் நடக்கும் நாள் இடம், விவாதம் நடக்கும் இடம், விவாதம் நடக்கும் விதம், விவாதத்தில் பங்கேற்போர் உள்ளிட்ட அனைத்தையும் பேசி முடிவு செய்து அதன் படி விவாதம் செய்யலாம்.

மார்க்க விஷயம் என்பதால் இதற்கு சாதகமான பதிலை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

இப்படிக்கு
#சேப்பாக்கம் #அன்ஸாரி
#மாநில_துணைத்தலைவர்_NTF
90032 21162 , 99620 41110.
ntf.headoffice@gmail.com

#தேசியதவ்ஹீத்கூட்டமைப்பு_NTF  
நெ:30, ஜகாங்கீர் தெரு, 
2nd லைன் பீச் ,
மண்ணடி , சென்னை-1.

Link: https://m.facebook.com/story.php?story_fbid=553995448643409&id=262221307820826

இதற்கு முஸ்தபாவிடமிருந்து வந்த பதில்

அன்பு சகோதரர் சேப்பாக்கம் அன்சாரி அவர்களுக்கு
வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்,

உங்கள் மெயில் கிடைத்தது என்னை விவாதத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தீர்கள். விவாதத்தை பொருத்தவரை எனது நிலைபாடு என் சேனலில் ஏற்கனவே தெரிவித்து உள்ளேன். அதாவது மார்க்க விஷயத்தில் கருத்து பரிமாற்றம் மட்டுமே பயன் தருமே ஒழிய விவாதம் அல்ல. என் கருத்தை நான் மக்கள் மத்தியில் வைக்கிறேன். உங்கள் மறுப்பையும் மக்கள் மத்தியில் வையுங்கள். மக்கள் ஆய்வு செய்து முடிவு செய்யட்டும் எது சரி? எது தவறு? என்று. இது தான் விவாதத்திலும் செய்யப் போகிறீர்கள்.

ஆனால் ஒரு வித்தியாசம் உண்டு.

குறிப்பிட்ட நேரத்திற்குள் சொல்ல வேண்டிய தேவை இங்கு இல்லை. ஆனால் விவாத களத்தில் விஷயத்தை ஆழமாக சிந்தித்து பதிலளிக்க  இடமில்லை. பாஸ்ட் புட் முறையில் உடனடி பதில்  வேண்டும். விவாதத்தில் மணி அடித்த பின் நேரம் கடந்துவிட்டால் பதில் தெரிந்தாலும் சொல்லமுடியாது. நேரம் கடந்த பின் சொல்வதால் சத்தியம் அசத்தியமாகிவிடாது.

2006ல் களியக்காவிளையில் நீங்கள் இதை உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.விவாத அரங்கில் முதல் நாள் நீங்கள் பேசாமல் இருந்ததாலும் மற்ற தாயிக்கள் ஜமாலி அவர்களுக்கு சரியாக பதில் தராமல் சொதப்பியதாலும், பிறகு நீங்கள் சென்னைக்கு வந்துசேர்ந்து பின்னர் தினமும் இரவு வின் டிவியில் தொடர் நிகழ்ச்சி நடத்தி உங்கள் மக்களுக்கு விளக்கம் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டீர்கள் என்பதையும் மறந்திருக்க மாட்டீர்கள்.

தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்பவர்கள் புத்திசாலிகள். எனவே மார்க்க விஷயத்தில் ஒரு கருத்தை நான் சொல்வது உங்கள் பார்வையில் தவறு என்று நீங்கள் கருதினால் அதை நீங்கள். மக்கள் மத்தியில் தாராளமாக எடுத்து வையுங்கள். விவாதம் செய்து குறிப்பிட்ட நேரத்தில் தான் பதில் தர வேண்டும் என்று நேரத்தை ஒரு தடையாக ஆக்க வேண்டாம். மேலும் மக்கள் ஒன்றும் அறியாதவர்கள் அதனால் வழிகெடுகிறார்கள் என்று  பேசியுள்ளீர்கள். மக்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் அவர்கள் நம்மை விட அறிவுள்ளவர்கள் அல்லாஹ்வின் அருளால் அவர்கள் முடிவு செய்வார்கள் எது சரி?எது தவறு? என்று.

மேலும் வெறுமனே மார்க்கத்தை எடுத்து சொல்வது மட்டும் போதாது விவாதமும் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தீர்கள். இந்த கருத்தில் நான் மாறுபடுகிறேன்.

எடுத்து சொல்வது மட்டுமே நபி ஸல் அவர்களின் பணியாக இருந்தது என்பதை குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. எனவே அதை செய்வோம் இன்ஷா அல்லாஹ் நம் இருவருக்கும் அல்லாஹ் கூலி தருவானாக.

[42:48]. (முஹம்மதே!) அவர்கள் புறக்கணித்தால் (கவலைப்படாதீர். ஏனெனில்) உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக நாம் அனுப்பவில்லை. எடுத்துச் சொல்வது தவிர உமக்கு வேறு இல்லை.

இப்படிக்கு
M.K.முஹம்மத் முஸ்தஃபா
சூப்பர் முஸ்லிம்
யூடியூப் சேனல்
ஈரோடு
mkmusthafa.erode@gmail.com

முஸ்தபா அவர்களின் விவாத மறுப்பு மெயில் கிடைப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னால் சிறிது  நேரத்துக்கு பின்னாலும் நாம் அனுப்பிய இரண்டு மெயில்கள் பின்வருமாறு:

இரண்டாம் அழைப்பு

முஸ்தபா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

நான் நேற்றைய தினம் விவாத அழைப்புக் கடிதம் கொடுத்திருந்தேன். இதைப் பார்த்த சில சகோதரர்கள் முஸ்தபா யாருடனும் விவாதத்துக்கு வரமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் எனக் கூறி உங்கள் வீடியோ கிளிப் ஒன்றை எனக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

யாருடனும் விவாதம் செய்வது இல்லை என்று சொல்லி நீங்கள் சொன்ன பொய்களை மக்கள் அறிந்து விடாமல் திரை போடுகிறீர்கள் என்று தான் அர்த்தம்.

எனவே விவாதிக்க முடியாது என்ற உங்கள் நிலையை ஏற்றுக் கொண்டு விவாதம் அல்லாத முறையில் இதன் உண்மைத் தன்மையைக் கண்டறியலாம்.

அதாவது நீங்கள் சொன்ன குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், சொன்ன விளக்கங்கள் ஆகியவை குறித்து நாங்கள் உங்களிடம் கேள்விகள் கேட்க விரும்புகிறோம். எங்கள் தரப்பில் எந்த விவாதமும் வைக்க மாட்டோம். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொன்னால் போதும்,. நீங்கள் இது வரை போட்ட வீடியோக்களில் சொல்லப்பட்ட விஷயங்கள் குறித்து மட்டுமே விளக்கம் கேட்போம். எந்த விவாதமும் செய்ய மாட்டோம்.

எங்கள் தரப்பில் மூன்று பேர் மட்டும் கேள்வி கேட்போம். நீங்கள் சொன்ன விஷயங்களில் உங்களுக்கு போதுமான தெளிவு இருக்கும் என்பதால் இது உங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

நாங்கள் விவாதம் செய்ய அழைக்காததாலும் உங்களிடம் கூடுதல் விளக்கம் கேட்க விரும்புவதாலும் இதனை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறொம்

உங்கள் சாதகமான பதில் கிடைத்த பின் இடம் தேதி ஆகியவற்றயும் இன்ன பிறவற்றையும்  பேசி ஒப்பந்தம் செய்து கொள்வோம்.

இதற்கான பதிலை. 15 நாட்களுக்குள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்

சேப்பாக்கம் அன்சாரி
Link : 
https://m.facebook.com/story.php?story_fbid=554460385263582&id=262221307820826

முஸ்தபா அவர்களுக்கு மூன்றாம் அழைப்பு

அன்பு சகோதரர் முஸ்தபா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....,

தாங்கள் அனுப்பிய விவாதம் குறித்து உங்கள் மெயில் கிடைக்கப்பெற்றது

அதில் நீங்கள் மிக முக்கியமாக கூறுகின்ற கருத்து என்னவென்றால் கடந்த காலங்களில் நடந்த விவாதங்களில் நேரமின்மை காரணமாக வாதத்தை முழுமையாக வைக்க முடியாமல் போனது குறித்து தெரிவித்திருக்கிறீர்கள்.

இந்த நேரக் கட்டுப்பாடு என்பது அது வஹீ அல்ல. விவாதத்தை அறிந்த நீங்கள் விவாத ஒப்பந்தம் என்பது என்ன என்பதை நீங்கள் அறியவில்லை!

விவாத ஒப்பந்தத்தில் இவ்வளவு நேரம் பேச வேண்டும் என்கின்ற கட்டுப்பாடு போடப்பட்டதால் அந்த நேரத்துக்குள் வாதம் வைக்கின்ற சூழ்நிலை உருவாகிறது. 

அதே நேரத்தில் ஒப்பந்தத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று நாம் முடிவு செய்யும் பட்சத்தில் தாங்கள் சொல்வது போல நேரத்தை ஒரு தடையாக ஆக்காமல் மக்கள் மத்தியில் முழுமையாக ஒரு கருத்தை எடுத்துச் சொல்லலாம்.

மேலும் மக்கள் ஒன்றும் அறியமாட்டார்கள் என்று நான் சொன்னதாகக் குற்றம் சாட்டி இருக்கிறீர்கள் அது போல் நாம் ஏதும் உங்களுக்கு அளித்த விவாத ஒப்பந்தத்தில் சொல்லவில்லை.

நீங்கள் இஸ்லாத்தை எப்படி கற்பனையாக சித்தரித்து மக்கள் மத்தியில் சொல்கிறீர்களோ அதே போல் இதுவும் உங்கள் கற்பனை தான்!

மேலும் விவாதத்திற்கு நாம் அழைப்பதே மக்கள் தெளிவாக முடிவு எடுப்பார்கள் அவர்கள் முன்னிலையில் உங்களின் தவறான பிராச்சாரத்தை தெளிவுபடுத்துவது மூலம் சத்தியத்தை அவர்கள் அறிய செய்வது தான் என்பதையும் உங்களுக்கு  தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் மார்க்கம் என்பது விவாதம் செய்வது அல்ல எடுத்து சொல்வது மட்டும் தான் என்றும் நபி (ஸல்) அவர்கள் அதை மட்டும் தான் செய்தார்கள் என்றும் எழுதியிருக்கிறீர்கள்.

இதுவும் உங்களின் மார்க்க அறியாமையை காட்டுகிறது அல்லாஹ் நபிக்கு குர்ஆனில் கட்டளையிடுகிறான்.

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர்வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 16:125

மார்க்கம் சொல்லும் இந்த வழிமுறையைப் பயன்படுத்தி இச்சமூகத்தில் முன் சென்ற  அறிஞர்கள் பல விவாதங்கள் நடத்தி சத்தியத்தை நிலை நாட்டி இருக்கிறார்கள்.

இல்லை விவாதம் செய்வது உங்களுக்கு பலவீனம் ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அதற்கு அடுத்து நாம் அனுப்பிய மெயிலில் மக்கள் முன்னிலையில் கேள்வி பதில் மூலம் உங்களின் தவறான மார்க்க பிரச்சாரத்திற்க்கு எங்களுக்கு நீங்கள் விடை அளியுங்கள்.

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி மூலம் நீங்கள் பேசிய வீடியோக்களில் இருந்தும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்கும்  பட்சத்தில் அது குறித்து மக்கள் தெளிவாக விளங்குவதற்கு பயனாக இருக்கும் இதற்கு முன் வாருங்கள் என்று உங்களை அன்போடு அழைத்து நிறைவு செய்கிறேன்.

இதற்க்கான பதிலை 10 நாட்களுக்குள் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்

சேப்பாக்கம் அன்ஸாரி.
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு- NTF
ntf.headoffice@gmail.com

Link : https://m.facebook.com/story.php?story_fbid=554544305255190&id=262221307820826

இப்படிக்கு
#சேப்பாக்கம் #அன்ஸாரி
#மாநில_துணைத்தலைவர்_NTF
90032 21162 , 99620 41110.
ntf.headoffice@gmail.com

#தேசியதவ்ஹீத்கூட்டமைப்பு_NTF  
நெ:30, ஜகாங்கீர் தெரு, 
2nd லைன் பீச் ,
மண்ணடி , சென்னை-1.

You have no rights to post comments. Register and post your comments.

Don't have an account yet? Register Now!

Sign in to your account